ரசிகர் மன்ற நிர்வாகிகள் மகள்களின் கல்வி செலவை ஏற்ற தனுஷ்
தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் தனுஷ். சமீபத்தில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம் ஏற்பட்டு செய்த ரத்ததான முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 30 மாவட்டங்களை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு 30 ஆட்டோக்கள் மற்றும் 150 ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். தற்போது இதனை தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தைச் சார்ந்த நிர்வாகிகள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு கல்வி படிப்பிற்கான உதவியை செய்துள்ளார்.
இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் மகள் ஹரிஷிதா என்பவருக்கு அவரின் இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றார். மேலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் மகள் ஸ்வேதா அவர்களின் மருத்துவ கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று, இவர்கள் இரண்டு பேருக்கும் காசோலையை வழங்கினார்.