உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் இயக்கிய படத்தை பார்த்து கோபமடைந்த தயாரிப்பாளர்

நடிகர் இயக்கிய படத்தை பார்த்து கோபமடைந்த தயாரிப்பாளர்


ஏற்கனவே ஒரு இயக்குனர், கிரீடம் என்று அர்த்தம் தரும் நான்கு எழுத்து பெயர் கொண்ட படத்தை, சண்டகோழி நடிகரை வைத்து இயக்கி வந்த நிலையில், அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து படத்தில் இருந்தே அவரை வெளியேற வைத்தார், சண்டக்கோழி நடிகர்; அதையடுத்து, தானே இயக்குனராகவும் உருவெடுத்தார். ஆனால், தற்போது அப்பட வேலைகள் முடிவடைந்து விட்ட நிலையில், படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் திருப்தி இல்லாமல் இருப்பதோடு, 'நடிகர் படத்தை சொதப்பி விட்டார்...' என்றும் விமர்சிக்கின்றனர். இதனால், 'வெற்றி, படத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி, எங்களை காலி பண்ணி விட்டாயே...' என்று அப்பட தயாரிப்பாளர், சண்டக்கோழியிடம் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !