உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 7ல் 4 படங்கள் ரிலீஸ்

ஆகஸ்ட் 7ல் 4 படங்கள் ரிலீஸ்

2026ம் ஆண்டின் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முதல் வாரத்தில் நான்கு படங்கள்தான் வெளியாக உள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக மொத்தமாக இரண்டு படங்கள் மட்டுமே வெளியான நிலையில் நான்கு படங்களாவது வருகிறதே என மகிழ்ச்சியடைய வேண்டிய நிலைதான் உள்ளது.

இந்த நான்கு படங்களில் ஜிடி நாயுடு பற்றிய பயோபிக் படமாக மாதவன் நடித்துள்ள 'ஜிடிஎன்' படம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் 'டிசி' ஆகிய படங்கள் முக்கியமான படங்கள்.

இப்படங்களைத் தவிர, 'போட்டோகிராபர், வைப் பேங்க் ஆப் இந்தியா' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன.

அடுத்த வாரம் ஆகஸ்ட் 14ல், “ஹாய், மகுடம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து இடைவிடாமல் வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !