உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் தொடங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 13 ; கிச்சா சுதீப்பே தொகுப்பாளராக தொடர்கிறார்

விரைவில் தொடங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 13 ; கிச்சா சுதீப்பே தொகுப்பாளராக தொடர்கிறார்


ஹிந்தியை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் விரைவில் பிக்பாஸ் சீசன்-13 துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த 12 வருடமாக நடிகர் கிச்சா சுதீப் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ், தெலுங்கில் தொகுப்பாளர்கள் அவ்வப்போது மாறினாலும் கூட, கன்னடத்தில் இவர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 11து சீசன் நடைபெற்ற போது, இந்த சீசனுடன் தான் இதிலிருந்து விலகப் போவதாகவும், தனது திரையுலகப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும் கிச்சா சுதீப் கூறியிருந்தார். ஆனாலும், அவர்தான் இதற்கு பொருத்தமானவர் என்று பிக்பாஸ் நிர்வாகம் அவரை விடாப்பிடியாக 13வது சீசன் வரை அழைத்து வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !