உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர் 2' பாடல் வெளியீட்டுவிழா எங்கே? துபாயா? மலேசியாவா? சென்னையா?

'ஜெயிலர் 2' பாடல் வெளியீட்டுவிழா எங்கே? துபாயா? மலேசியாவா? சென்னையா?


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. அதை எங்கே நடத்துவது? எப்படி நடத்துவது என குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

முதலில் மலேசியாவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என யோசிக்கப்பட, 'ஜனநாயகன்' படத்தின் பாடல் வெளியீட்டுவிழா அங்கே நடந்தது. அதில் 1 லட்சம் பேர் வரை கலந்துகொண்டனர். அந்த அளவுக்கு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதற்கு பல தடைகள், தவிர, சென்டிமென்ட்டாக அங்கே பாடல் வெளியீட்டுவிழா நடந்த அந்த படம் ஓடவில்லை. அதனால், மலேசியா வேண்டாம் என்று ஒரு தரப்பு சொல்கிறதாம்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என்றால், சமீபகாலமாக ரஜினினிக்கும், விஜய்க்கும் உறவு சரியில்லை. ஜெயிலர் 2 பாடல் வெளியீட்டு விழாவுக்கு கேட்டு, அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது என நினைக்கிறார்களாம். சூர்யாவின் 'கருப்பு' பட பாடல் வெளியீடு மதுரையில் நடந்தது. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பாடல் விழா கோவையில் நடந்தது. அந்த மாதிரி நடத்தலாமா என்றும் பிளான் இருக்கிறாம். ரஜினியின் 2.0 பாடல் வெளியீட்டு துபாயில் நடத்தப்பட்டுவிட்டதால் அங்கே செல்லவும் தயங்குகிறார்களாம். ஜனநாயகன் படத்தின் முதல்நாள் வசூல், ஜனநாயகன் பட மொத்த வசூலை மிஞ்ச வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஜெயிலர் 2வுக்கு நிறைய பிரஷராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !