தனது அடையாள உரிமைகளை பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் நடிகை தபு மனு
சமீப காலமாகவே திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களின் குரல், தோற்றம் மற்றும் பெயர்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோரி நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஐஸ்வர்யா ராய், கஜோல், மோகன்லால், ஷாருக்கான் உள்ளிட்ட பலர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை தபு தனது ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது பெயர், புகைப்படம், அடையாளத்தை வெளிப்படுத்தும் பிற அம்சங்களை தகுந்த அனுமதியின்றி வணிக ரீதியாக டிஜிட்டல் தளத்தில் பயன்படுத்துகின்றனர்; அதை தடுக்க வேண்டும். மேலும் வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் எனது அனுமதி இன்றி பரப்பப்படும் அவதூறு அல்லது முறையற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை நீக்க கோரியும் அந்த மனுவில் தபு குறிப்பிட்டுள்ளார்.