உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விழா மேடையில் ரவீனா டாண்டனை நாய் கடிக்க முயன்றதால் பரபரப்பு

விழா மேடையில் ரவீனா டாண்டனை நாய் கடிக்க முயன்றதால் பரபரப்பு


பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் தமிழில் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் 'ஓ மை டாக்' என்கிற திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்காக அவர் மேடையில் ஏறியபோது, அந்த படத்தில் நடித்திருந்த நாய் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆகியோர் அவர் அருகில் நின்றிருந்தனர்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ரவீனா டாண்டனை கடிக்க முயன்ற நாய், அவரது துணியை பிடித்து இழுத்தது. ஆனாலும், இதனால் ரவீனா டாண்டன் கொஞ்சம் கூட பதட்டப்படாமல் அந்த நாயை தடவி கொடுத்து அமைதிப்படுத்தி அந்த சூழலை அழகாக கையாண்டார். நாய் அவரை கடிக்க முயன்ற செயலால் அங்கு கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !