உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் எல்லைகளை ஒருபோதும் மீற மாட்டேன் : தர்ஷா குப்தா

என் எல்லைகளை ஒருபோதும் மீற மாட்டேன் : தர்ஷா குப்தா

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் ஓரிரு படங்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. சினிமா, சின்னத்திரையை தாண்டி வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலம். இவர் வெளியிடும் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. சமீபத்தில் இவர் ஆப் ஒன்றை துவங்கி அதில் சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை வெளியட்டார். இதனால் ரசிகர்களை அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு பதிலளித்து தர்ஷா வெளியிட்ட பதிவில், ‛‛என்னை நேசித்தவர்களுக்கு நான் எப்படிப்பட்டவள் என்பதை விளக்கும் நிலை வரும் என நினைக்கவில்லை. சம்பந்தப்பட்ட செயலியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அது ரசிகர்களுடன் ஜாலியாக பேசும் தளம் என்று மட்டுமே நினைத்தேன். நான் கவர்ச்சியான போட்டோக்களை பகிரலாம். ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. பணம், புகழுக்காக அந்த எல்லையை ஒருபோதும் மீற மாட்டேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !