உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் படத்திற்கு மும்பையில் ஆப்கானிஸ்தான் கிராம செட்

சல்மான் படத்திற்கு மும்பையில் ஆப்கானிஸ்தான் கிராம செட்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை, 2027ம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஒரு முக்கிய சண்டைக்காட்சிக்காக ஆப்கானிஸ்தான் கிராமத்தையே செட் போட்டு மறுஉருவாக்கம் செய்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் நடைபெறும் இந்த படப்பிடிப்புப் பகுதியில் சல்மான் கானுடன் இணைந்து நயன்தாராவும் பங்கேற்றுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இப்படம், தற்போது தற்காலிகமாக எஸ்விசி-63 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !