உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகள் : குஷ்பு நெகிழ்ச்சி பதிவு

தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகள் : குஷ்பு நெகிழ்ச்சி பதிவு

90களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் ஒரு ரவுண்ட் வந்தார். தற்போது குணச்சித்ர நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதியாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் இவர் அறிமுகமாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என்னுடைய முதல் தென்னிந்திய படமான 'கலியுக பண்டவுலு' 1986ல் ஆகஸ்ட் 14ம் தேதியான இதேநாளில் வெளியானது. தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். 15 வயது சிறுமியாக எதுவும் தெரியாமல் பதற்றத்துடன் வந்தேன். இங்கு தான் எனது தொழில், வாழ்க்கை, குடும்பம் என எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டேன்.

இவ்வளவு ஆண்டுகளாக என்னை ஆதரிக்கும், அன்பு செலுத்தும், வழிநடத்தி செல்லும் அனைவருக்கும் கடன்பட்டுள்ளேன். குறிப்பாக ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள். நீங்கள் இல்லாமல் இந்த இடத்திற்கு நான் வந்திருக்க முடியாது. முதன்முதலாக என்னை தெலுங்கில் அறிமுகம் செய்த ராமநாயுடு, ராகவேந்திரா மற்றும் சுரேஷிற்கு என் நன்றி.

இந்த பயணத்தில் ஒரு நடிகராக தொடங்கி, நட்சத்திரமாக உயர்ந்த பின்னரும் கூட வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பராக கிடைத்தவர் வெங்கடேஷ். 40 ஆண்டுகளாக என் வாழ்வில் ஒரு பகுதியாக இருப்பதற்கும் நன்றி, இன்னும் பல ஆண்டுகள் நண்பர்களாக தொடர்வோம், லவ் யூ வெங்கி'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !