உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெங்கி அட்லூரியின் வித்தியாசமான ஹாட்ரிக் ரூ.100 கோடி

வெங்கி அட்லூரியின் வித்தியாசமான ஹாட்ரிக் ரூ.100 கோடி

ஒரு மொழியில் பிரபலமான இயக்குனர் அந்த மொழி நடிகர்கள் நடித்த படங்களை இயக்காமல் வெவ்வேறு மொழி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி ரூ.100 கோடி வசூலில் ஹாட்ரிக் அடித்துள்ளார். அவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி.

தெலுங்கில் 'தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங் தே' ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கி. 2023ல் தமிழ் நடிகரான தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தை இயக்கினார். அந்தப் படம் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்தது.

அடுத்து மலையாள நடிகரான துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த 'லக்கி பாஸ்கர்' தெலுங்குப் படத்தை இயக்கினார். 2024ல் வெளிவந்த இந்தப் படமும் 100 கோடி வசூலைக் கடந்தது.

அதற்கடுத்து தமிழ் நடிகரான சூர்யா நடிக்க 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தை தமிழில் மட்டும் இயக்கினார். இப்படமும் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இப்படி ஒரு சாதனையை இதற்கு முன்பு வேறு எந்த ஒரு இந்திய இயக்குனரும் நிகழ்த்தியதில்லை. அடுத்தடுத்து 100 கோடி படங்களைக் கொடுத்ததன் மூலம் வெங்கி அட்லூரியின் இமேஜ் நன்றாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !