உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் படங்களை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் டிசி. லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வந்தது. 25 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபீசில் 70 கோடி வசூலித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது இணையப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இந்த டிசி படம் மிகவும் அசல் மற்றும் அற்புதமாக உள்ளது. மாஸாக உள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும், படத்திற்கு கூடுதல் வரவேற்பையும் அளித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வசூலுடன் டிசி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !