மோகன்லால் படத்தில் நடிக்கிறாரா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்?
கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர். மிகக் குறுகிய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'அதிரடி' திரைப்படத்தில் ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மோகன்லாலும் அவரும் காரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள சஞ்சு சாம்சன், சிறப்பான ஒன்று வந்து கொண்டே இருக்கிறது...” என்று கூறியுள்ளார். மேலும் லாலேட்டனுடன் இதுபோன்ற ஒரு விஷயத்தை செய்தது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என்றும் தனது இன்ஸ்டாகிராம் கதையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மோகன்லால் படத்தில் சஞ்சு சாம்சன் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார் என்றும், இல்லை மோகன்லாலுடன் ஏதோ ஒரு சிறப்பு திட்டத்திற்காக இணைந்து செயல்படப் போகிறாரோ என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.