உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி நடத்தும் குஷ்பு

மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி நடத்தும் குஷ்பு


ஜெயா டிவியில் குஷ்பு நடத்திய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்து வரும் ஜாக்கெட்டுகளும் பிரபலம். அதற்காகவே பெண்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள். 'ஜாக்பாட் ஜாக்கெட்'டுகளும் விற்பனைக்கு வந்தது. தற்போது அந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த இருக்கிறது ஜெயா டிவி.

கடந்த சில நாட்களாக 'குழப்பத்தில் குஷ்பு' என்ற புரோமோவை ஜெயா டிவி ஒளிபரப்பி வருகிறது. அதில் குஷ்பு “ஒரே குழப்பமாக இருக்கு. சினிமாவில் நடிச்சாச்சு, அரசியலிலும் கால் பதிச்சாச்சு, குழந்தைக்கும் கல்யாணம் பண்ணியாச்சு. அடுத்து என்ன பண்ணலாம்” என்று பேசியிருந்தார். இந்த புரோமோ மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கானது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பா.ஜ.,வில் அளிக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தீவிர அரசியலிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாத குஷ்புவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சின்னத்திரைக்கு அழைத்து வந்திருக்கிறது ஜெயா டிவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !