உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிவி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த நடிகை

டிவி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த நடிகை

தமிழில் வெளியான 'வானம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜாஸ்மின் பாசின். அதன்பிறகு ஜில் ஜங் ஜக் படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், தாய் மொழியான பஞ்சாபியில் நடித்தார்.

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கத்ரோன் கே கில்லாடி' என்ற சாகச நிகழ்ச்சியின் 15வது சீசனில் பங்கேற்று வருகிறார். இதனை ரோஹித் ஷெட்டி தொகுத்து வழங்குகிறார். 13 போட்டியாளர்களில ஜாஸ்மினும் ஒருவர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நீர், வாகனங்கள் உள்பட பல்வேறு ஆபத்தான சவால்களை செய்து தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்த நீர் மற்றும் வான்வழி சாகச சவாலின்போது, எதிர்பாராவிதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு மூளையில் லேசான அதிர்ச்சி ஏற்பட்டு, தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, 72 மணி நேரம் முழுமையாக ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது சற்று குணமடைந்துள்ள ஜாஸ்மின் இந்த விபத்து குறித்து கூறும்போது , “எனக்கு ஏற்பட்ட விபத்து எதிர்பாராத அனுபவமாக இருந்தது. சாகசம் நடந்தபோது என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது அந்த அனுபவத்தின் ஒரு பகுதி கூட எனக்கு நினைவில் இல்லை” என்றார். இதனை 'ஷார்ட் டைம் மெம்மரிலாஸ்' என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !