உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தனுஷை இயக்கும் வெங்கி அட்லூரி

மீண்டும் தனுஷை இயக்கும் வெங்கி அட்லூரி

தெலுங்கு சினிமாவில் 2018ல் வருண் தேஜ் நடித்த தொலி பிரேமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் வெங்கி அட்லூரி. அதன்பிறகு, மிஸ்டர் மஜ்னு, ரங் தே மற்றும் தனுஷ் நடிப்பில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் வெளியான வாத்தி, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் ஆகியவை 100 கோடி வசூல் படங்களாக அமைந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கி, திரைக்கு வந்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் 100 கோடி வசூலை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.

சமீபத்திய சினிமா வட்டாரங்களின் தகவலின்படி, வெங்கி அட்லூரி அடுத்து வாத்தி படத்தை அடுத்து மீண்டும் தனுஷ் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. காவல் துறை பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !