உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி 158 வது படத்தின் தலைப்பு காகா : வெளியீட்டு தேதியும் அறிவிப்பு

சிரஞ்சீவி 158 வது படத்தின் தலைப்பு காகா : வெளியீட்டு தேதியும் அறிவிப்பு

நடிகர் சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் பாபி கொல்லி ஆகியோர் வால்டேர் வீரய்யா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில், இப்படத்திற்கு காகா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மாஸ் மற்றும் ஸ்டைலான அம்சங்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. சிரஞ்சீவி, ஒரு அக்வா தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் சத்யம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது மகள் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர், அப்பகுதியில் அனைவராலும் மதிக்கப்படும் நபராக இருக்கிறார். ஆனால் வீடியோவின் இறுதியில், அவர் சாதாரண மனிதனைப் போல வேடமிட்டு வாழும் ஒரு கேங்ஸ்டர் என்பது தெரிய வருகிறது.

கேங் லீடர் பின்னணி இசையுடன் சிரஞ்சீவி தோன்றும் காட்சி, திரையரங்குகளில் உருவாகவிருக்கும் மாஸ் கொண்டாட்டத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் 2027ம் ஆண்டு ஜனவரி 13 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவியின் மகளாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !