தஞ்சையில் துவங்கிய ஜி.வி.பிரகாஷின் ‛நிஞ்சா' படப்பிடிப்பு
ADDED : 1 hours ago
முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் நிஞ்சா. இது ரொமாண்டிக் காமெடி ஜானரில் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. தஞ்சாவூரில் பூஜை மற்றும் 20 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்
'தலைவர் தம்பி தலைமையில்', 'லவ் டுடே', 'பார்க்கிங்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' திரைப்படத்தை தயாரித்துள்ள கே.எஸ். சினிஷ், இப்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.