உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தொடர்ந்து 72 மணி நேரம் நடித்த ரஜினி

பிளாஷ்பேக் : தொடர்ந்து 72 மணி நேரம் நடித்த ரஜினி

ரஜினிக்கு அப்போதிருந்த சென்டிமெண்டுகளில் ஒன்று பொங்கல், தீபாவளிக்கு தனது படம் ரிலீசாக வேண்டும் என்பது. 1991ம் ஆண்டு பொங்கல் அன்று ஒரு சூப்பரான படம் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு அப்போது கமர்ஷியல் இயக்குனராக வளர்ந்து வந்த ராஜசேகரை தனது இயக்குனராக முடிவு செய்தார்.

ரஜினிகாந்த், மஞ்சுளா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் 'காலம் மாறிப்போச்சு' என்ற படம் தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு அவசர அவரமாக கதை தேடி 1989ல் வெளியான 'தேவா' என்ற கன்னடத் திரைப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது அந்த படம்தான் 'தர்மதுரை'. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பொங்கலுக்கு ரஜினி படம் இல்லை என்ற தவகல் வெளிவரத் தொடங்கியது. இதனால் ரஜினி படப்பிடிப்பு தடையாக இருந்த பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை தானே களத்தில் இறங்கி சரி செய்து கடைசி நாட்களில் தொடர்ந்து 72 மணிநேரம் நடித்து படத்தை முடித்துக் கொடுத்தார் ரஜினி. இந்த 72 மணிநேர நடிப்பு சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !