உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா அப்படி... கயாடு லோகர் இப்படி

நயன்தாரா அப்படி... கயாடு லோகர் இப்படி

நயன்தாரா அக்காவாக நடித்த டாக்சிக் படம் வெற்றி அடையவில்லை, படு தோல்வி. ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த ஹாய் படம் வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஆனால் சென்னையில் தியேட்டர் விசிட் அடித்தார். நான் பேட்டி கொடுக்க மாட்டேன், விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்ற பாலிசியை இந்த படத்தில் மாற்றி உள்ளார். அவரே படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் ஹாய் படத்தை ஆர்வமாக விளம்பர படத்திய தாக தகவல். மற்ற படங்களுக்கு அது தொடருமா என தெரியவில்லை.

துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கயாடு லோஹர், தமிழ் படமான இம்மார்டலை புறக்கணித்தார். தமிழில் டிராகனுக்கு முன்பு நடித்த படம் இம்மார்டல். அதை ஏன் புறக்கணித்தார், சம்பள பிரச்னையா? ஈகோ பிரச்னையா என தெரியவில்லை. அவர் மீது இம்மார்டல் படக்குழு கடும் கோபத்தில் இருக்கிறதாம். ஐ ஆம் கேம் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்மார்டலில் கயாடு நடிப்பு, அழகு பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !