பாகுபாடு பார்க்காமல் இசையமைக்கும் இளையராஜா
பாணர் இயக்கத்தில் நந்து, ஆராதனா பட் நடிக்கும் ‛ராவணன் சோலையில் சிவன்மலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. வெள்ளி மலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை தி நகரில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் இந்த படத்தின் பூஜை நடந்தது. இதில் இளையராஜா கங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜா பெரிய படங்களுக்கும் இசையமைக்கிறார். அதேபோல் புதுமுகங்கள் நடிக்கும் இதுபோன்ற சின்ன படங்களுக்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தமாத இறுதியில் இளையராஜா இசையமைப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டோரதி படம் வெளியாக உள்ளது. இந்த படங்கள் தவிர பால்கி இயக்கத்தில் உருவாகும் ஒரு தமிழ் படத்துக்கும் இளையராஜா இசை அமைத்து வருகிறார்.