Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அக்கம் பக்கம்/ வங்கி கணக்கு காலி!

 வங்கி கணக்கு காலி!

 வங்கி கணக்கு காலி!

 வங்கி கணக்கு காலி!

 வங்கி கணக்கு காலி!

PUBLISHED ON : மார் 16, 2026 01:39 AM


Google News
Latest Tamil News
'ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வந்தாலே, நமக்கு செலவு வந்து விடுகிறது...' என, கவலைப்படுகிறார், ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா.

ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கவுள்ளது.

ஹரியானா சட்டசபையில் ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு, 48 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இங்கு ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்வதற்கு, 31 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. இதன்படி, பா.ஜ., சார்பில், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை எந்தவித பிரச்னையும் இன்றி தேர்வு செய்ய முடியும்.

காங்கிரசுக்கு, 37 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த கட்சியும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்ய முடியும். ஆனால், காங்கிரசில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, அவர்களை கட்சி மாறி ஓட்டளிக்க வைத்து, மற்றொரு எம்.பி., பதவியையும் கைப்பற்ற, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனை வரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளது, அந்த கட்சி மேலிடம். இதற்கான செலவு முழுதும், முன்னாள் முதல்வரான பூபிந்தர் சிங் ஹூடா தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, 'ராஜ்யசபா தேர்தல் முடிவதற்குள், ஹூடாவின் வங்கி கணக்கு கரைந்து விடும் போலிருக்கிறது...' என கிண்டலடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.