sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/பெரிய பதவிகள் காத்திருக்கு!

பெரிய பதவிகள் காத்திருக்கு!

பெரிய பதவிகள் காத்திருக்கு!


PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இந்த முறை இவர் கண்டிப்பாக எம்.பி.,யாகி விடுவார்...' என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பற்றி பொறாமையுடன் கூறுகின்றனர், சக நடிகையர்.

இவர், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் படங்களில் நடித்துள்ளார். அரசியல் ஆர்வமுள்ள கங்கனா, சமீபகாலமாக பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். பிரதமர் மோடியையும், மத்திய அரசின் திட்டங்களையும் புகழ்ந்து, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

எளிதாக வெற்றி பெறுவதற்காகவும், மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவும், அரசியல் கட்சியினர் சினிமா நட்சத்திரங்களை வேட்பாளர்களாக நிறுத்துவது வழக்கம்.

கடந்த லோக்சபா தேர்தலில் ஹேமமாலினி, சன்னி தியோல், ரவி கிஷண் போன்ற சினிமா பிரபலங்கள், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்த வரிசையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட கங்கனா விரும்புவதாகவும், அதற்கு பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஹரியானாவில் வாய்ப்பு கிடைக்கா விட்டால், தன் சொந்த மாநிலமான ஹிமாச்சலில் போட்டியிடவும் கங்கனா தயாராக உள்ளார்.

'கங்கனாவுக்கு இனி சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும், அரசியலில் ஏறுமுகம் தான். பெரிய பதவிகள் அவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு...' என்கின்றனர், சக நட்சத்திரங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us