Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அக்கம் பக்கம்/ நாட்டுக் கோழியும், இட்லியும் சாப்பிட்ட மயக்கம்!

 நாட்டுக் கோழியும், இட்லியும் சாப்பிட்ட மயக்கம்!

 நாட்டுக் கோழியும், இட்லியும் சாப்பிட்ட மயக்கம்!

 நாட்டுக் கோழியும், இட்லியும் சாப்பிட்ட மயக்கம்!

PUBLISHED ON : டிச 05, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
'முதல்வர் பதவி பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்து விடும் போலிருக்கிறதே...' என, கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் முணுமுணுக்கின்றனர்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமார், துணை முதல்வராக உள்ளார்.

கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, 'முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா; அடுத்தஇரண்டரை ஆண்டுகள் சிவகுமார் முதல்வராகஇருக்கலாம்' என, அவர் களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்பட்டதாக தகவல் வெளியானது.

தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார் சித்தராமையா; சிவகுமாரும் விடுவதாக இல்லை. காங்கிரஸ் மேலிட தலைவர்களோ, 'உங்களுக்குள் பேசி, ஒரு முடிவுக்கு வாருங்கள்...' என கூறி விட்டனர்.

இதையடுத்து, சமீபத்தில் பெங்களூரில் உள்ள சிவகுமார் வீட்டுக்கு, பேச்சு நடத்துவதற்காக சென்றார், சித்தராமையா. காலையிலேயே அவருக்கு இட்லி, நாட்டுக் கோழி குழம்பு விருந்து கொடுத்து அசத்தி விட்டார், சிவகுமார்.

அசைவ உணவு பிரியரான சித்தராமையா, நாட்டுக் கோழி குழம்பையும், இட்லியையும் ஒரு பிடி பிடித்து விட்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார்.

'நாட்டுக் கோழி குழம்பு சாப்பிட்ட மயக்கத்தில், முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து விடுவாரோ...?' என, சித்தராமையா ஆதரவாளர்கள் கவலைப் படுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us