/தினம் தினம்/அக்கம் பக்கம்/ எதற்கு இவ்வளவு ஆவேசம்!

 எதற்கு இவ்வளவு ஆவேசம்!

 எதற்கு இவ்வளவு ஆவேசம்!

 எதற்கு இவ்வளவு ஆவேசம்!

 எதற்கு இவ்வளவு ஆவேசம்!

PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
'ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் போலிருக்கிறது...' என, கேரள பா.ஜ., மூத்த தலைவர் கே.சுரேந்திரன் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், பிற கட்சியினர்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு டிச., 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.

இதில், கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில், பா.ஜ., தலைவர்கள் உறுதியாக உள்ளனர். 'கேரளா என்றால், காங்கிரஸ் அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு இடையேதான் போட்டி என்ற மாயை உள்ளது; அதை இந்த முறை தகர்ப்போம்...' என்கின்றனர், இங்குள்ள பா.ஜ., நிர்வாகிகள்.

கேரள பா.ஜ., முன்னாள் தலைவரான கே.சுரேந்திரன், 'கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாலக்காடு, பந்தளம் ஆகிய நகராட்சிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை, திருவனந்தபுரம், திருச்சூர் மாநகராட்சிகளில் வெற்றி பெறுவதுடன், 10க்கும் மேற்பட்ட நகராட்சிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த உள்ளாட்சி தேர்தலில், ஒரு அரசியல் புரட்சி நடக்கும்...' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'கடந்த லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில், பா.ஜ., வெற்றி பெற்றது. அப்போது, கேரள பா.ஜ., தலைவராக சுரேந்திரன் இருந்தார்; இப்போது ராஜிவ் சந்திரசேகர் தான், தலைவராக உள்ளார். பதவியில் இல்லாத சுரேந்திரன், ஏன் இவ்வளவு ஆவேசப் படுகிறார்...?' என, கம்யூ.,க்கள் கிண்டல் அடிக்கின்றனர்.