PUBLISHED ON : மே 03, 2026 01:21 AM

'நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கூறினால், அது குற்றமா...' என அப்பாவியாக கேட்கிறார், கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த நேரம் பார்த்து, முதல்வர் பினராயி விஜயன் ஒரு தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளார்.
கேரளாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், 'வெயில் நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், 'கூலிங் கிளாஸ்' அணிந்து செல்லவும்...' என, முதல்வர் என்ற முறையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
சில மலையாள படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா முள்ளச்சேரி என்ற நடிகை, சமீபத்தில் ஒரு கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார். இதைப் பார்த்த பலரும், 'கோவிலுக்குள் கூட, கூலிங் கிளாஸ் அணிய வேண்டுமா...' என, கடுமையாக விமர்சித்தனர்.
அதற்கு ஸ்ரீவித்யா, 'முதல்வர் கூறிய ஆலோசனைப்படி தான், கூலிங் கிளாஸ் அணிந்திருந்தேன். இதற்காக, என்னை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர்; இதை முதல்வர் வேடிக்கை பார்க்கலாமா..' என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயனோ, 'நாளைக்கு முதல்வர் பதவியில் இருப்பேனா என்பதே சந்தேகமாக உள்ளது. இதில், இந்த பிரச்னை வேறா...?' என புலம்புகிறார்.





