PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

உரமாக மாற்றும் டாய்லெட்
உலகின் முதல் மஷ்ரூம் (காளான்) திறனில் இயங்கும் 'மைகோ' டாய்லெட்டை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை உருவாக்கியுள்ளது. இது கழிவுகளை தானாகவே உரமாக மாற்றுகிறது. இதற்கு தண்ணீர், மின்சாரம், ரசாயனம் தேவையில்லை. இதில் காளான்களின் வேர் அமைப்பான 'மைசீலியம்' பயன்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்சைகளின் இயற்கையான சிதைவு திறன்களைப் பயன்படுத்துவதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பூங்கா, பின்தங்கிய பகுதிகளுக்கு ஏற்றது. கழிவு மேலாண்மை பிரச்னைக்கு தீர்வாகவும் அமைந்துள்ளது.


