PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
பனி உருவாவது எப்படி
தற்போது பனி அதிகளவில் இருக்கிறது. இரவில் காற்றை விட பூமி அதிகமாக குளிரும்போது, காற்றிலுள்ள ஆவி குளிர்ந்த தரைப்பரப்பில் உள்ள இலைகள், பொருட்கள் மீது விடியற்காலையில் படிகிறது. அப்போது அது உறைந்து பனித்திவலையாக மாறுகிறது. பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாகிறது. சூடான தண்ணீர் ஆவியாக மாறி நிலத்தின் மேல் பகுதிக்கு வரும்போது, அங்கே குளிர்ச்சியான காற்றுடன் சேர்கிறது. அதனால் கண்ணுக்குத் தெரியாத நீராவி, கண்ணுக்குத் தெரியக்கூடிய பனியாக மாற்றம் அடைகிறது. இப்பனியில் மிகச் சிறிய நீர்த்துளிகள் கலந்திருக்கும்.
தகவல் சுரங்கம்
அறிவியலில் பெண்கள்
அறிவியலில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 11ல் அறிவியலில் பெண்கள், சிறுமிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆராய்ச்சியில் 33 சதவீதம், இன்ஜினியரிங்கில் 28 சதவீதம், கம்ப்யூட்டர், ஐ.டி., துறையில் 40 சதவீதம் மட்டுமே பெண்கள். உள்ளனர்.
* கணவன் - - மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி பிப்., இரண்டாவது ஞாயிறு (பிப். 11) உலக திருமணம் தினம் கொண்டாடப்படுகிறது.