Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

முதல் விண்வெளி பெண்

உலகின் முதன்முதலில் குறைந்த வயதில் விண்வெளிக்கு சென்றவர் ரஷ்யாவின் வேலன்டினா டிரிஸ்கோவா. 1937ல் பிறந்த இவர் 26 வயதில் 1963 ஜூன் 16ல் வோஸ்டாக் விண்கலம் மூலம் தனி ஒருவராக விண்வெளிக்கு சென்றார். தனியாக விண்வெளி சென்ற முதல் பெண் இவர் மட்டுமே. விண்வெளியில் 48 முறை பூமியை சுற்றி வந்தார். மூன்று நாள் தங்கியிருந்தார். இன்ஜினியரிங் முடித்த இவர் துவக்கத்தில் டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் பணியாற்றினார். பின் ரஷ்ய விமானப்படையில் சேர்ந்தார். விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் சேர்ந்தார்.

தகவல் சுரங்கம்

சர்வதேச காடுகள் தினம்

காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் சர்வதேச காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'காடுகள், புதுமை: சிறந்த உலகிற்கான புதிய தீர்வுகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள். காடுகளால் நிழல், விறகு, மழை, காற்று உட்பட பல நன்மை கிடைக்கிறது. காடு என்பது மரங்களை மட்டும் குறிப்பதில்லை. இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று.

* கவிதை எழுதுதல், வாசிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் உலக கவிதை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap