/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் தண்ணீர் அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் தண்ணீர்
அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் தண்ணீர்
அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் தண்ணீர்
அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் தண்ணீர்
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
விண்கல்லில் தண்ணீர்
'ரியுகு' விண்கல்லில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விண்கல்லை ஆய்வு செய்ய ஜப்பான் 2014ல் 'ஹயபுசா2' விண்கலத்தை அனுப்பியது. இது 2018ல் 'ரியுகு' விண்கல் சுற்றுப்பாதையை அடைந்தது. ஓராண்டு 'ரியுகு' விண்கல் மீது ஆய்வு மேற்கொண்டு அதன் மண், பாறைத்துகள் மாதிரியை எடுத்துக்கொண்டு 2020ல் பூமிக்கு வந்தது. இந்த விண்கல் மாதிரியை ஆய்வு செய்த டோக்கியோ பல்கலை விஞ்ஞானிகள், ரியுகு விண்கல்லில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் திரவ நீர் இருந்திருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.