/தினம் தினம்/செய்தி எதிரொலி/ படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

படப்பை,:நம் நாளிதழில் வெளி யான செய்தியை அடுத்து, படப்பை மேம்பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, சேதமாகி இருந்த கான்கிரீட் சாலையின் மீது, புதிதாக தார் சாலை அமைக்கப் பட்டுள்ளது.
படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால பணிகள் முடிந்து, கடந்த ஜூன் மாதம் வாகன பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
தற்போது, படப்பை மேம்பாலத்தின் மீது, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு, மூன்று மாதங்களே ஆகும் நிலையில், மேம்பாலத்தின் மீதுள்ள சாலையில், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள ன.
மேம்பால சாலையில் கான்கீரிட் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, படப்பை மேம்பாலத்தின் மீது விரிசல்களுடன் இருந்த கான்கிரீட் சாலை மீது, புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனால், விரிசல்கள் மறைந்து, போக்குவரத்திற்கு ஏற்றதாக சாலை மாற்றப்பட்டுள்ளது.