PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: 'ஜி.எஸ்.டி., வரி குறைப்பாலும், வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பை உயர்த்தியதாலும், இந்தியர்கள், 2.50 லட்சம் கோடி ரூபாயை சேமிக்கலாம்' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். இதைத் தானே தொடக்கத்தில் இருந்தே, எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை, எப்போதே சேமித்து இருக்க முடியும்.
டவுட் தனபாலு: 'ஜி.எஸ்.டி., வரியை பிற்காலத்தில் திருத்தி அமைப்போம்' என்ற வாக்குறுதியை, இப்ப மத்திய பா.ஜ., அரசு நிறைவேற்றி இருக்கு... ஆனா, 2021 தேர்தலின்போது நீங்க கொடுத்த பல வாக்குறுதிகள் இன்னும், 'பெண்டிங்'குல கிடக்குதே... அதை பத்தி ஏன் பேச மாட்டேங்கிறீங்க என்ற, 'டவுட்' வருதே!
தமிழக துணை முதல்வர் உதயநிதி: அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன் என பல அணிகள் உள்ளன. சாத்துார் சட்டசபை தொகுதியில் கூட அ.தி.மு.க., முன் னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஒரு அணி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலைமையில் மற்றொரு அணி செயல்படுகிறது.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரி, அ.தி.மு.க.,வில் பல அணிகள் இருப்பது உண்மை தான்... அதே நேரம், அத்தனை அணியினரும், 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட்டு, அ.தி.மு.க., ஆட்சியை அமைக்கணும்' என்ப தில் ஒருமித்த கருத்துடன் இருக்காங்களே... அவங்க எல்லாரும் தேர்தல் நேரத்தில் ஒன்று சேர்ந்துட்டா, உங்களுக்கு சிக்கல் தான் என்பதில், ' டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில், 16 மாநிலங்கள் உபரி வருவாய் ஈட்டியிருப்பதாக, சி.ஏ.ஜி., எனப்படும் இந்திய தலைமை கணக்காயர் அலுவலக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாக பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம், உபரி வருவாயில் முதலிடம் பிடித்துள்ளது. விடியல் ஆட்சி தரப் போவதாக கூறிய தி.மு.க., நிதி நிர்வாகத்தில், தமிழகத்தை, 27வது இடத்திற்கு தள்ளியிருக் கிறது.
டவுட் தனபாலு: 'தமிழக பொருளாதாரம், 11.19 சதவீதம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு'ன்னு ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலின் பெருமை அடிச்சுக்கிறாரு... ஆனா, மத்திய தணிக்கை அறிக்கையில், 'தமிழகம் 27வது இடத்தில் இருக்கு'ன்னு சொல்றாங்க... இது சம்பந்தமா தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட் டால் மட்டுமே உண்மை எதுன்னு, 'டவுட்' இல்லாம தெரியும்!