sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : மார் 04, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2026 01:52 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர்: சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஒதுக்க முன்வந்துள்ள 25 தொகுதிகள், எங்களுக்கு ஏற்புடையதல்ல. நாங்கள் விரும்பும் தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே, பேச்சை தொடர முடியும். தி.மு.க., எப்போதெல்லாம் பலவீனமாக இருந்ததோ, அப்போதெல்லாம் நாங்கள், எங்களது இடங்களை குறைத்துள்ளோம். இப்போது, தி.மு.க., திருப்பித் தர வேண்டிய இடத்தில் உள்ளது.

டவுட் தனபாலு: ஆளுங்கட்சியாக தி.மு.க., பலமா இருக்கு என்பதில், 'டவுட்' இல்லை... ஆனா, நாடு முழுக்க எல்லா மாநில தேர்தல்கள்லயும் தோற்று போய், அடி மேல அடி வாங்கி பலவீனமா இருக்கும் உங்க கட்சிக்கு, கூடுதல் சீட்களை வழங்க, தி.மு.க., முன்வருமா என்பது 'டவுட்' தான்!

lll

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ ஆதரவாளர் சத்தியகுமாரன்: ஈரத்துண்டை போட்டு கழுத்தறுத்து, இன்றும் நம்பிக்கை துரோகம் செய்யும் தி.மு.க., கூட்டணியில் இருந்து உடனே வைகோ வெளியேற வேண்டும். அடுத்தவர்களுக்கு பாலும், பாயசமும் கொடுத்து, நமக்கு வெறும் பச்சை தண்ணீர் மட்டும் கொடுக்கின்றனர். இதை, ம.தி.மு.க., தொண்டர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு போதும் நம்மை அழித்துவிட முடியாது. வைகோ உடனே முடிவெடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இவங்களை மாதிரியானவங்க பேச்சை கேட்டு முடிவுகள் எடுத்து எடுத்து தான், வைகோ கட்சி இன்னைக்கு நோஞ்சான் மாதிரி இருக்கு... அவரை இன்னும் உசுப்பேத்தி, அரசியல் களத்தில் இருந்தே அகற்ற பார்க்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

பத்திரிகை செய்தி: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீடு உள்ளது. வீட்டின் கதவில் இரு புறமும் இரட்டை இலை சின்னம் இருந்தது. வீட்டுச் சுவரில் அ.தி.மு.க., கொடியின் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. அவர் தி.மு.க.,வில் இணைந்ததை அடுத்து, வீட்டுக் கதவில் இருந்த இரட்டை இலை சின்னம், 'வெல்டிங்' இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. வீட்டுச் சுவரிலும் தி.மு.க., கொடியின் வண்ணம் பூசப்பட்டது.

டவுட் தனபாலு: சுவரில் அடிச்ச வண்ணத்தை எப்ப வேண்டுமானாலும் மாத்திக்கலாம்... ஆனா, இரட்டை இலை சின்னத்தை அகற்றியவர், உதயசூரியன் சின்னத்தை ஏன் பொருத்தவில்லை...? எதிர்காலத்துல கட்சி தாவ வேண்டிய சூழல் வந்தால், வெல்டிங் இயந்திரத்துக்கு வேலை வைக்க வேண்டாம்னு நினைச்சிட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us