sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மார் 14, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026 03:02 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் கொள்கை. சகோதரர் விஜய் கட்சி துவங்கியது முதல், எங்கள் கொள்கையையே முழங்கி வருகிறார். அரசியல் எதிரி தி.மு.க., தான் என்று, அனைத்து பிரசார கூட்டங்களிலும் பேசி வருகிறார். தி.மு.க.,வை வீழ்த்த, ஒருமித்த கருத்துள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். அந்த வகையில், தே.ஜ., கூட்டணியில் விஜயும் இணைந்தால் சரியாக இருக்கும்.

டவுட் தனபாலு: சகோதரர் விஜய், உங்களுடன் வரணும்னு அழைப்பு விடுக்கிறீங்களே... அவரோ, முதல்வர் கனவில் இருக்காரு... நீங்களோ, 'ஆட்சியில் யாருக்கும் பங்கு தர மாட்டோம்'னு சொல்றீங்க... அவருக்கு, துணை முதல்வர் பதவியாவது தருவோம்னு உங்களால உத்தரவாதம் தர முடியுமா என்ற, 'டவுட்' வருதே!

lll

தமிழக துணை முதல்வர் உதயநிதி: தற்போது, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒன்றாகி விட்டன. விரைவில் பா.ஜ.,விடம் அ.தி.மு.க.,வை பழனிசாமி சரண்டர் ஆக்குவார். ஒட்டுமொத்த தமிழகத்தையும், பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார். அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை மக்கள், 'கிளீன் போல்ட்' ஆக்குவர்.

டவுட் தனபாலு: ரெண்டு கட்சிகளுமே, ஆட்சியை பிடிக்கிறதுக்காக இலவச வாக்குறுதிகளை வாரி வீசுறீங்க... தேர்தலில் எந்த கட்சி ஜெயிச்சாலும், ஆட்சிக்கு வந்ததும் வரிகளை போட்டு தீட்டுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... அதனால, தமிழக மக்கள் தான், 'கிளீன் போல்ட்' ஆகப் போறாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

lll

கரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி: கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசலில், 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அந்த கூட்டத்தை நடத்தியது த.வெ.க.,வினர். அனுமதி கொடுத்தது போலீஸ். இதில் எனக்கு சம்மன் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின்போது, எல்லா அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதே முறையான நடவடிக்கையாக இருக்கும்.

டவுட் தனபாலு: கரூர் உயிர் பலிகள் நடந்ததுமே, நள்ளிரவே முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு ஓடோடி போய், மருத்துவமனையில் எல்லாருக்கும் ஆறுதல் சொன்னாரு... அமைச்சர்கள் மகேஷ், சுப்பிரமணியன் எல்லாம் அங்க போனாங்க... 'அவங்களுக்கும் சம்மன் கொடுத்து விசாரணைக்கு கூப்பிடுங்க'ன்னு கோர்த்து விடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us