/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவிக்கும் 8ம் வகுப்பு மாணவர் சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவிக்கும் 8ம் வகுப்பு மாணவர்
சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவிக்கும் 8ம் வகுப்பு மாணவர்
சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவிக்கும் 8ம் வகுப்பு மாணவர்
சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவிக்கும் 8ம் வகுப்பு மாணவர்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன், சிலம்பம் போட்டியில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
மூங்கில் துறைப்பட்டு அடுத்த சவேரியார்பாளையத்தை சேர்ந்த வின்சென்ட் பவுல்ராஜ் மகன் ஜோவின். மைக்கேல்புரம் புனித மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மூங்கில்துறைப்பட்டு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையில் சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார்.
ஜோவின் மாநில அளவில் நடந்த போட்டி களில் 3 முறையும், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 5 முறை, உள்ளூரில் நடந்த 20க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
சிறு வயது முதல் ஏழ்மையிலும் தொடர்ச்சியாக சிலம்பு பயிற்சி பெற்று சாதனை படைத்து வரும் ஜோவினை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தனது கிராமம், பயிற்சியாளர்கள் அ ண்ணாமலை, ஜான்வின்சென்ட் ராஜ், விக்கி ஆகியோருக்கு பெருமை சேர்ப்பேன் என்று ஜோவின் கூறினார்.