/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம் விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம்
விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம்
விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம்
விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம்

வேலுார்:
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், தன் நடிப்பால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர். கேரளா, ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர் விஜய், தற்போது அரசியல் கட்சி தொடங்கி தீவிர பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர், அவரை சந்தித்து புகைப்படம் எடுப்பதற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த சேகர், 32, என்ற அவர், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலில் இருந்து வேலுார் வழியாக, சென்னை நீலாங்கரைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் கூறியதாவது:விஜயை சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது கனவு. ஓங்கோலில், என் நடைபயணத்தை தொடங்கினேன். விரைவில் சென்னையில் அவரை சந்திப்பேன் என்றார்.