Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ புதிய ரேஷன் கார்டு தர ரூ.3000 லஞ்சம்: பெண் ஊழியர் கைது

 புதிய ரேஷன் கார்டு தர ரூ.3000 லஞ்சம்: பெண் ஊழியர் கைது

 புதிய ரேஷன் கார்டு தர ரூ.3000 லஞ்சம்: பெண் ஊழியர் கைது

 புதிய ரேஷன் கார்டு தர ரூ.3000 லஞ்சம்: பெண் ஊழியர் கைது

UPDATED : டிச 05, 2025 09:02 AMADDED : டிச 05, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூரில் புதிய ரேஷன் கார்டை வழங்குவதற்கு ரூ.3000 லஞ்சம் வாங்கிய விற்பனையாளர் முத்துலெட்சுமி 49, கைது செய்யப்பட்டார்.

சாயல்குடியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி பெயரில் ரேஷன் கார்டு வேண்டி கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தார். 2 மாதம் கழித்து ரேஷன் கடைக்கு புதிய ரேஷன் கார்டை அனுப்பியுள்ளதாக கடலாடி தாலுகா அலுவலகத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் மூக்கையூர் ரேஷன் கடை விற்பனையாளர் முத்துலெட்சுமியை சந்தித்து கேட்டார்.

உங்களுக்கு கார்டு வந்துள்ளது. ரூ.3500 கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என்று கூறியும், கண்டிப்பாக வேண்டும் எனக் கேட்டார்.

இந்நிலையில் புகார் தாரரின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ காப்பீடு பதிவு செய்ய ரேஷன் கார்டு உடனடியாக தேவைப்பட்டது.

மீண்டும் முத்துலெட்சுமியை சந்தித்து கேட்ட போது அதிகாரிகளுக்கு தரவேண்டியுள்ள ரூ.500ஐ குறைத்துக் கொண்டு ரூ.3000 மட்டும் கடை தற்காலிக பணியாளர் சுப்பிரமணியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

நேற்று முன்தினம் மாலை ரசாயனம் தடவிய ரூ.3000 த்தை ரேஷன்கடை முன்பகுதியில் வைத்து தற்காலிக பணியாளர் சுப்பிரமணியிடம் அந்த நபர் கொடுத்த போது மறைந்திருந்த டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

விற்பனையாளர் முத்துலெட்சுமி சொல்லித்தான் அப்பணத்தை வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து முத்துலெட்சுமியை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us