தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்

 சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்

 சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்


UPDATED : மார் 11, 2026 12:21 AM

ADDED : மார் 11, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 12:21 AM ADDED : மார் 11, 2026 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகர்: ஹிமாச்சலில் வயலுக்கு சென்றபோது திடீரென தாக்கிய சிறுத்தையை, 12 நிமிடம் போராடி வெறும் கையால், இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்றார்.

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பர்வேஷ் சர்மா. ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, தன் வயலுக்கு சென்ற பர்வேஷை அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாக்கியது.

அதிர்ச்சியடைந்த அவர், சமயோசிதமாக செயல்பட்டு சிறுத்தையின் தாடையை பிடித்து போராடினார். பின் சிறுத்தையின் தலை மற்றும் கழுத்தை அடித்து தாக்கி 12 நிமிட போராட்டத்துக்கு பின் கொன்றார். சிறுத்தையுடன் நடந்த போராட்டத்தில் பர்வேசுக்கு உடம்பில் காயம் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்து வந்த வனத்துறை டிவிஷனல் அதிகாரி ராஜ்குமார் சர்மா, இளைஞருக்கு 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கினார்.

முன்னதாக கடந்த 6ம் தேதி முதல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அதை பிடிக்க கூண்டு வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மனித - விலங்கு மோதல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us