Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?

சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?

சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?

சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?

PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்தால், அ.தி.மு.க.,வை பா.ஜ.,சிறிது சிறிதாக அழித்து விடும். பிற்காலத்தில், அ.தி.மு.க., முழுதுமே காணாமல் போய்விடும். எனவே, பா.ஜ.,விடம் அ.தி.மு.க., ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.

பா.ஜ., இதுவரை தங்கள் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியையும் அழித்ததும் இல்லை; கூட்டணியை விட்டு விலக்கியதும் இல்லை.

பீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி, குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த போதும், 'தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நிதிஷ் குமார் தான் முதல்வர் வேட்பாளர்' என்று தாங்கள் கூறிய ஒற்றை வார்த்தைக்காக, பெரும்பான்மை தொகுதிகளில் வென்ற பா.ஜ., நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கியது.

இப்போது வரை, கூட்டணி கட்சியை மரியாதையுடன் நடத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க.,வோ, கூட்டணி கட்சி களுக்கு ஒன்றிரண்டு சீட்டு களும், சில கோடி பணமும் கொடுத்து, கூட்டணி கட்சிகளை அவர்களது சொந்த கட்சியின் பெயரில் தேர்தலில் நிற்க விடாமல், தங்கள் சின்னத்தில் மட்டுமே நிற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது.

ஏற்கனவே, தேர்தல் செலவுக்கு என்று பல கோடி ரூபாய்களை தி.மு.க.,விடம் இருந்து வாங்கும் சிறு கட்சியினர், வேறு வழியில்லாமல், தி.மு.க., சின்னத்திலேயே தேர்தலில் நிற்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி ஒரு கட் சி தன் சொந்த சின்னத்திலும், கட்சியின் பெயரிலும் தொடர்ந்து மூன்று நான்கு தேர்தல்களில் பங்கு பெறவில்லை என்றால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இதன்காரணமாக, அக்கட்சிகள் தங்களது பெயரையே இழந்து விடுகின்றன. பின், வேறு வழி இல்லாமல் பிரதான கட்சிகளின் ஓர் அங்கமாக மாற்றப்பட்டு விடுகின்றன.

இதற்கு, சமீபத்திய எடுத்துக்காட்டு, தமிழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி பதிவுகள் ரத்தான விவகாரம்!

இனி அவர்களுக்கு வேறு வழி?

தி.மு.க.,வில் ஒருவராக மாற வேண்டியது தான்!

இப்படி தி.மு.க., விரித்த தந்திர வலையில் சிக்கிய கட்சிகள், தங்கள் கட்சியையே இழந்து விடுகின்றன.

இத்தகைய கட்சிகளின் தலைவர்கள் வேறு கூட்டணிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் கூட, அவற்றின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், அவர்களை பணத்திற்கும், பதவிக்கும் அடிமைப்படுத்தி விடுகிறது, தி.மு.க.,

எனவே, கட்சி தலைமையும் வேறு வழி இன்றி, தி.மு.க.,விலேயே தொடர வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இத்தகைய நிலையில்தான், தற்போது வைகோவின் ம.தி.மு.க.,வும், திருமாவளவனின் வி.சி., கட்சியும் உள்ளன.

இப்படி, தான் மாட்டிக் கொண்டிருப்பது சிலந்தி வலைக்குள் என்பது புரியா மல், அ.தி.மு.க.,வை திருமாவளவன் எச்சரிக்கை செய்வது, நகைப்பை யே ஏற்படுத்துகிறது!



மறந்து போனது ஏன்? டி.ஈஸ்வரன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இளையராஜாவின், 50 ஆண்டுகால இசைப் பயணத்திற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த முதல்வர் ஸ்டாலின், 'இளையராஜாவுக்கு, 'இசைஞானி' என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தவர் கருணாநிதி' என்றார். அதேநேரம், பிரதமர் மோடி அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து கவுரவித்ததை சொல்ல மறந்து போனார்.

மேலும், இளைய ராஜாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை நிறைவேற்றும் பதவியில் இருப்பவர் பிரதமர் மோடி. அவர-து பெயரைச் சொல்லி கோரிக்கை வைக்காமல், தான் பேசும் மைக்கிடம் கோரிக்கை வைக்கிறார். அதுவா நிறைவேற்றும்? ஸ்டாலினுக்கு ஏன் இந்த வறட்டு கவுரவம்?

'உலக சரித்திரத்தில் ஓர் இசையமைப்பாளருக்கு முதல்வர் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல்முறை' என்று, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார், இளையராஜா.

கடந்த 2014ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின், 75 ஆண்டுகால இசைப் பயணத்திற்கு பாராட்டு விழா நடத்தினார்.

அவ்விழாவில், 'என் நாடி நரம்புகளில் ஓடும் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சை. பல்வேறு துறைகளில் உள்ள கலைஞர்களை மறக்காமல் அவர்களுக்கு விழா எடுக்கும் முதல்வரை பாராட்டுகிறேன்...' என்றார், இளையராஜா. அன்று கூறியது வெறும் மேடை அலங்கார பேச்சா?

விழாவில், எத்தனையோ விஷயங்களை நினைவுபடுத்தி பேசிய வருக்கு, விஸ்வநாதன், ராமமூர்த்தி க்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டு விழா எடுத்தது மட்டும் மறந்து போனது ஏன்?



வசனம் பேசினால் ஆட்சி கிடைத்து விடுமா ? பொ.பாலாஜிகணேஷ், சிதம்பர த்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் பேசும்போது, 'இதற்கு முன் பேசிய இடங்களில், மைக்கை, 'கட்' செய் து விட்டனர்; மின்சாரத்தை நிறுத்திவிட்டனர். இதையெல்லாம் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் செய்ய முடி யுமா?' என்று கேட்டுள்ளார்.

தன்னை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு இணையாக நினைத்துக் கொண்டு இக்கேள்வியை கேட்டதை நினைத்து சிரிப்பு தான் வருகிறது.

நாட்டில் உயரிய பதவியில் இருப்பவர்களுக்கு, அவர்கள் எங்கு வந்தாலும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது விதி.

இன்னும் தேர்தலையே சந்திக்காத, அரசியல் களத்தில் புதிதாக பிறந்த குழந்தையான விஜய், தன்னைப் பார்க்க, கை கொடுக்க என மணிக்கணக்கில் காத்திருக்கும் தொண்டர்களை கண்டு கொள்ளாமல், தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, இரும்பு தடுப்புகளை வைத்து அரண் அமைத்தபடி மக்களை சந்திக்கும்போது, நாட்டை ஆளும் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு பாதுகாப்பு தேவைப்படாதா?

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் விடுவது, மின்சாரத்தை துண்டிப்பது என அற்பத்தனமான அரசியல் வேலைகள் நடக்கத்தான் செய்யும். இதையெல்லாம் சவாலாக எடுத்துக் கொண்டுதான், அரசியல் களத்தில் பயணிக்க வேண்டும்.

இது என்ன சினிமாவா... முழுப்பக்கத்திற்கு மூச்சு முட்ட வசனம் பேசி முடித்ததும், காட்சி மாறி, ஆட்சி மாற?

அரசியல் எனும் கடலில், பதவி எனும் முத்தை எடுக்க வேண்டும் என்றால், இவற்றை எல்லாம் கடந்து தான் விஜய் வர வேண் டும்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us