Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ எதற்கு கொந்தளிப்பு?

 எதற்கு கொந்தளிப்பு?

 எதற்கு கொந்தளிப்பு?


PUBLISHED ON : ஏப் 12, 2026 02:06 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026 02:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக தலைமைச் செயலரை மாற்றியுள்ளது, தேர்தல் கமிஷன். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு டேவிட்சன் தேவாசீர்வாதமும் மாற்றப்பட்டு, சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சில அதிகாரிகளும் கூட மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தி.மு.க., முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, 'நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் கமிஷன், மத்திய பா.ஜ., அரசின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது.

'அரசியல் சட்டம், தேர்தல் கமிஷனுக்கு தந்துள்ள பாதுகாப்பு, பா.ஜ.,விற்கு தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல' என்று பொங்கியுள்ளார்.

இதையே தான் தமிழக மக்களும் முதல்வரிடம் கேட்கின்றனர்...

தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு உடனே அனுமதி கிடைப்பதும், எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் ஏன்? காவல் துறை மக்களுக்காக வேலை செய்கிறதா, தி.மு.க.,விற்காக வேலை செய்கிறதா?

குற்றவாளி என்று உறுதியாகி, மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவித்து, ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைத்தது, எந்த அரசியல் சட்டத்தின்படி?

பணியாளர்கள் நியமன ஊழலில், அமைச்சர் நேரு, 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்துள்ளதாக கூறி, அமலாக்கத் துறை உரிய ஆவணங்களை அளித்தும், இதுவரை தமிழக காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லையே... எந்த அரசியல் சட்டம் அளித்த பாதுகாப்பில், தி.மு.க., அரசின் காவல் துறை வழக்கு பதியவில்லை?

திருப்பரங்குன்றம் மலை தீபத் துாணில் விளக்கேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்த மறுத்தது ஏன்?

சட்டத்திற்கு உட்பட்டு தி.மு.க., ஆட்சி நடத்துகிறதா இல்லை, சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துகிறதா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் இலவசங்களை அள்ளி வீசியதுடன், வாக்காளர்களை விலங்குகளைப் போல் பட்டியில் அடைத்து வைத்தது, எந்த தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டது?

எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடு எத்தனையோ புகார் அளித்தும், தி.மு.க., ஆதரவு தேர்தல் பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே... அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு வேலை செய்தனரா, தி.மு.க.,விற்கு வேலை செய்தனரா?

தி.மு.க.,வின் வண்டவாளம் தெரிந்து தான், தேர்தல் ஆணையம், கையில் சாட்டையை எடுத்துள்ளது.

மடியில் கனமில்லை என்றால் எதற்கு புலம்ப வேண்டும்? நேர்மையாக தேர்தலை எதிர்கொள்வோராக இருந்தால், எதற்கு கொந்தளிக்க வேண்டும்? lll

சரியான தண்டனை! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் மரணத்திற்கு காரணமான ஒன்பது போலீசாருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மரண தண்டனை விதித்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா தொற்று பரவலின் போது, சாத்தான்குளத்தில் விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்த குற்றத்திற்காக, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை விசாரணை என்ற பெயரில், காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்துள்ளனர், போலீசார்.

தற்போது, அக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து, தந்த ை - மகனை அநியாயமாகப் பறி கொடுத்த அக்குடும்பத்திற்கு நீதி வழங்கி விட்டது, நீதிமன்றம்.

அதேநேரம், இதுவே இறுதியான தீர்ப்பாக இருக்காது.

ஏனெனில், இது ஜனநாயக நாடு; இங்குள்ள சட்டமோ பல ஓட்டைகள் நிறைந்தது. அதனால், இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வர். பின், ஜாமின், வாய்தா என்று ஆண்டுகள் உருண்டோடுமே தவிர, குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கப் போவதில்லை.

இருப்பினும், இத்தீர்ப்பைக் கேட்டு தமிழக காவல் துறை ஆடிப் போயிருக்கும் என்பதே உண்மை. ஏனெனில், இந்திய வரலாற்றில், இதுபோன்றதொரு தீர்ப்பை காவல் துறையினருக்கு எந்த நீதிமன்றமும் வழங்கியதில்லை.

பார்ப்போம்... இதன் பிறகாவது, 'லாக்கப்' மரணங்கள் நிகழாமல் இருக்கிறதா என்று!

lll

தி.மு.க.,விற்கு ஓட்டு போடலாமா? எஸ்.வேணுகோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில் எப்படியும் மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, தி.மு.க., பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனாலும், ஓட்டு போடப் போவது மக்கள் தானே...

எனவே, ஒவ்வொருவரும் கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க., ஆட்சியை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்...

துணை முதல்வர் உதயநிதி சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு, அதை ஒழித்தே தீர வேண்டும் என்று முழக்கமிட்டார்.

அக்கட்சியை சேர்ந்த பல அமைச்சர்கள் ஹிந்து மதத்தையும், அதன்வழிபாட்டு முறையையும் மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். அதிலும், டி.ஆர்.பாலு, தானே முன்னின்று பல ஹிந்து கோவில்களை இடித்துள்ளதாக பெருமைப்பட்டுள்ளார்.

அதுமட்டுமா... திருப்பரங்குன்றம் மலை தீபத் துாண் விவகாரத்தில், தி.மு.க., போட்ட ஓரங்க நாடகத்தை மறக்க முடியுமா?

விளக்கேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், சிறுபான்மை ஓட்டுக்காக, அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்ததுடன், தீபத் துாணை நில அளவைக் கல் என்றும், எல்லைக் கல் என்றும் ஏகடியம் செய்ததை மன்னிக்கத் தான் முடியுமா அல்லது அதற்காக உயிர் நீத்த பூரணச்சந்திரனின் மரணத்தை ஒன்றுமில்லை என்று ஒதுக்கி விடத் தான் முடியுமா?

எங்கோ பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர் என்பதற்காக, இங்கே குரல் கொடுத்த தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், உடைகளை களைந்து, ஹிந்துவா என்று அடையாளம் காணப்பட்டு, பஹல்காமில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அதற்கு சாட்சி கேட்ட கூட்டம் இது!

இன்று, தேர்தலுக்காக பக்தி வேஷம் போட்டு, ஓட்டு பிச்சை கேட்டு வந்தால், அவர்களுக்கு ஓட்டு போடலாமா?

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், தி.மு.க., 200க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்துள்ளது; பல கோவில்கள் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாத நிலையில் பாழடைந்து கிடக்கும் போது, கோவில்கள் வருமானத்தை எடுத்து, ஆடம்பர செலவு செய்து வரும் அறநிலையத் துறையின் அடாவடிகளை தான் மன்னிக்க முடியுமா?

புற்றுக்குள் இருப்பது கருநாகம் என்று தெரிந்த பின், அதற்குள் எவரேனும் கையை விடுவரா... ஹிந்து விரோத கொள்கை கொண்டவர்கள் என்று தெரிந்தும் தி.மு.க.,விற்கு ஓட்டு போடலாமா?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap