sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 07, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2026 01:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 7:

மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில், ஜமீன்தாரி பிராமணரான தேவேந்திரநாத் தாகூர் - சாரதா தேவி தம்பதியின் மகனாக, 1861ல் இதே நாளில் பிறந்தவர், ரவீந்திரநாத் தாகூர்.

சுயசிந்தனைக்கான கல்வியை விரும்பிய இவர், தன் வீட்டிலேயே வரைதல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணி தம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட வற்றை, தானே கற்றார். சட்டம் பயில லண்டன் சென்று, அதை முடிக்காமலே நாடு திரும்பினார்.

தன் 8 வயதிலேயே கவிதைகள் எழுத துவங்கிய இவர் நாவல், நாடகங்கள் எழுதுவது, இசையமைப்பாளர், ஓவியர் மற்றும் தத்துவஞானி என, பன்முக திறமைகள் கொண்டவராக விளங்கினார். 2,000க்கும் மேற்பட்ட கவிதைகள், சிறுகதைகளை எழுதினார்.

இவர் எழுதிய, 'ஜன கண மன, அமர் சோனர் பங்களா' ஆகிய பாடல்கள், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் தேசிய கீதங்களாக உள்ளன. இவர் துவக்கிய, 'சாந்திநிகேதன்' திறந்தவெளி பள்ளி, இன்று பல்கலையாக உள்ளது.

வங்க மொழியில் இவர் எழுதிய, 'கீதாஞ்சலி' என்ற கவிதை தொகுப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர், தன் 80வது வயதில், 1941, ஆகஸ்ட் 7ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us