PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:44 AM

ஜூன் 29, 1931
திருநெல்வேலியில், 1931ல் இதே நாளில் பிறந்தவர் பத்மநாபன் கிருஷ்ணகோபால அய்யங்கார் எனும் பி.கே.அய்யங்கார்.
இவர், திருவனந்தபுரத்தில் பள்ளி, கல்லுாரி படிப்புகளை முடித்து, திருவிதாங்கூர் பல் கலையில் இயற்பியலில் முதுநிலை பட்டமும், டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் அணுக்கரு ஆய்வு செய்து, மும்பை பல்கலையில் பிஎச்.டி., பட்டமும் பெற்றார்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகி, உள்நாட்டு தொழில்நுட்பத்தில், 'பூர்ணிமா' அணு உலையை வடிவமைத்து, 'துருவா' அணு உலை திட்டத்தையும் செயல்படுத்தினார்.
இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர், அணுசக்தி துறையின் செயலராக உயர்ந்தவர், 1974ல் பொக்ரான் அணு வெடிப்பு சோதனைக்கான விஞ்ஞானியாகவும் பணியாற்றினார். இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சு குழுவில் இடம்பெற்றார்.
'பத்ம பூஷண், சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருதுகளுடன் ஹோமி பாபா பதக்கமும் பெற்ற இவர், தன் 80வது வயதில், 2011, டிசம்பர் 21ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
