தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'கட்சி மாறியது தான் காரணம்!'

'கட்சி மாறியது தான் காரணம்!'

'கட்சி மாறியது தான் காரணம்!'


PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், புதுார் யூனியன் கவுன்சிலர் பெருமாள்சாமி, தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, பின் அ.தி.மு.க.,வில் இணைந்தார். விளாத்திகுளம் - மதுரை சாலையில் சில நாட்களுக்கு முன் தள்ளுவண்டியில் பானிபூரி கடை திறந்தார்.

கடையை காலி செய்ய போலீசார் எச்சரித்தனர். விளாத்திகுளம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் தலைமையில் பெருமாள்சாமி உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்றனர்.

டி.எஸ்.பி., ராமகிருஷ்ணனிடம், 'கடையை ஏன் காலி செய்ய வேண்டும்' என, கேட்க, டி.எஸ்.பி., 'அந்த இடத்தில் விபத்து வாய்ப்பு இருப்பதால் வேறு இடத்திற்கு செல்லுங்கள்' என்றார். அப்போது, கட்சியினர் எதிர் கேள்வி கேட்க, டி.எஸ்.பி., - அ.தி.மு.க.,வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை வேடிக்கை பார்த்த காவலர் ஒருவர், 'இவ்வளவு அப்பாவியா வந்து கடையை காலி செய்ய காரணம் கேட்குறாரே... கட்சி மாறியது தான் காரணம்னு இன்னுமா புரியல...' என, முணுமுணுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us