Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நாசுக்கா குத்தி காட்டுறாரோ?'

 'நாசுக்கா குத்தி காட்டுறாரோ?'

 'நாசுக்கா குத்தி காட்டுறாரோ?'

 'நாசுக்கா குத்தி காட்டுறாரோ?'

PUBLISHED ON : டிச 01, 2025 01:13 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் உள்ள அராபத் ஏரியை, 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர், காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நாசர், 'கேட்டவுடன் தொகுதி நிதியை எடுத்து கொடுப்பதில், எம்.பி., சசிகாந்த் செந்தில் , பாரி வள்ளல் போன்றவர்' என, புகழ்ந்து தள்ளினார்.

அதன் பின் பேசிய சசிகாந்த் செந்தில், 'அமைச்சர் நாசர், பாசத்தால் எல்லாரையும் அடித்து வேலை வாங் கிடுவாரு' எனக் கூற, அனைவரும் சிரித்தபடி கைதட்டினர்.

இதை கேட்ட, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன் நாசர், ஏற்கனவே கட்சியினரை கல்லால அடிச்சதை தான், எம்.பி., நாசுக்கா குத்தி காட்டுறாரோ...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.