PUBLISHED ON : மே 02, 2026 02:00 AM

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதி, தி.மு.க., வேட்பாளருமான துரைமுருகன் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிய தேர்தலாக இந்த தேர்தல் இருந்ததாக பலரும் சொல்கின்றனர். ஆனால், இதை நாங்கள் வழக்கமான தேர்தலாகத் தான் பார்த்தோம். நான் எப்படி உழைக்கிறேன் என்பது என் தொகுதி மக்களுக்கு தெரியும்.
'இதனால், காட்பாடியில் என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் தான், தமிழக அரசியலில் மாற்றமா, மாற்றம் இல்லையா என்பது தெரிய வரும்' என்றார்.
இதை கேட்ட தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இந்த முறை துரைமுருகன் ஜெயிச்சாலும், அமைச்சர் பதவி கிடைக்குமா...' என கேள்வி எழுப்ப, சக தொண்டரோ, 'சீட்டை போராடி வாங்கிய மாதிரி, அமைச்சர் பதவியையும் போராடி வாங்கிடுவார்...' என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.
