/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'பழைய பல்லவியை பாடுவாங்க!'

'பழைய பல்லவியை பாடுவாங்க!'

'பழைய பல்லவியை பாடுவாங்க!'

'பழைய பல்லவியை பாடுவாங்க!'

'பழைய பல்லவியை பாடுவாங்க!'

PUBLISHED ON : மார் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், அதிகமாக கேள்விகள் கேட்டபடியே இருந்தனர்.

அதிகாரிகள் பொறுமையாக பதில் அளித்தாலும், கூடுதல் தகவல்களை கேட்டு விவசாயிகள் விவாதம் செய்தனர். இதனால், 'டென்ஷன்' ஆன கலெக்டர், 'இது, சட்டசபை அல்ல, நான் சபாநாயகரோ, நீங்கள், எம்.எல்.ஏ.,க்களோ இல்லை. விவசாயத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தால், எப்போது கூட்டத்தை முடிப்பது?' என, சற்று கோபத்துடன் கேட்டார்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒருவர், 'இந்த கலெக்டர் வந்த பின்தான், நம்ம கேள்விகளுக்கு அதிகாரிகள் சரியான பதிலை கொடுக்கின்றனர். அதை கெடுக்கும் வகையில், நம்மாட்களே செயல்பட்டால், 'பார்க்கலாம், நடவடிக்கை எடுக்கிறோம்'னு அதிகாரி கள், பழைய பல்லவியை பாடி, கூட்டத்தை முடிச்சிடுவாங்க...' எனக்கூற, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.