PUBLISHED ON : ஜன 17, 2024 12:00 AM

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
கோவை மண்டலத்தில், 17 பஸ் டிப்போக்கள் இருக்கும் நிலையில், முதல் நாளில் சுங்கம் - 2 டிப்போ முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, இரண்டு தொழிலாளர்கள் சட்டையை கழற்றி, அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற தொழிலாளர்களையும் சட்டையை கழற்றுமாறு சொல்ல, பலரும் யோசித்து அமைதி காத்தனர்.
ஆவேசமான அந்த தொழிலாளி, 'நம்மகிட்ட ஒற்றுமை இருந்தால் தான், முதல் நாளே பேச்சு நடத்த அழைப்பாங்க... அனைவரும் சட்டையை கழற்றலாமே... எந்த சலுகையும், சம்பள உயர்வும் இல்லாம, ஏற்கனவே அரை நிர்வாணமா தானே நம்ம வாழ்க்கை ஓடுது...' என்றதும், சக தொழிலாளர்கள் உணர்ச்சி பொங்க கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தை தொடர்ந்தனர்.


