தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அதானே அவங்களுக்கு ஆதங்கம்!'

 'அதானே அவங்களுக்கு ஆதங்கம்!'

 'அதானே அவங்களுக்கு ஆதங்கம்!'

1


PUBLISHED ON : ஜூலை 17, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2026 01:36 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., முருகன், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'எங்கள் கட்சி எம்.எல். ஏ.,க்களை மிரட்டியோ, பணம் கொடுத்தோ வாங்க முடியாது. 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், யாரும் விலை போக மாட்டார்கள். தலைவர் விஜய் இருக்கும் வரை, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் ஆசை நிறைவேறாது.

'தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவியருக்கு மாதம் 2,500 ரூபாய், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது மாறி விட்டனர். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஊழலற்ற நிர்வாகம் நடக்கிறது' என்றார்.

இதை கேட்ட முருகனின் ஆதரவாளர் ஒருவர், 'அதானே தி.மு.க., - அ.தி.மு.க.,வினருக்கு ஆதங்கமா இருக்கு... தினமும் நம்மை வசைபாடுறாங்க' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us