PUBLISHED ON : மே 04, 2026 01:29 AM

திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜமால் முகமது கல்லுாரியில், நான்கடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.
இதை படம் பிடிக்க இங்கு வந்த பத்திரிகை போட்டோகிராபர்கள், ஓட்டு இயந்திர பெட்டிகள் இருந்த அறையை படம் எடுக்க முயன்றனர். அப்போது, அங்கு ஓடி வந்த, திருச்சி தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ஷிருஷ்டி சிங், 'உங்களுக்கு போட்டோ எடுக்க அதிகாரம் கொடுத்தது யார்; எப்படி உள்ளே வரலாம்...' என்று கூறியதோடு அல்லாமல், சில போட்டோகிராபர்களை ஒருமையிலும் திட்டினார்.
இதனால், பத்திரிகை போட்டோகிராபர்களுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டோகிராபர் கள் அதிருப்தி அடைந்து, அங்கிருந்து வெளியேறினர்.
அப்போது ஒரு போட்டோ கிராபர், 'இந்த போலீஸ் அதிகாரிகள் நம்ம கிட்ட தான் பாய்வாங்க... இந்த வேகத்தை, சட்டம் - ஒழுங்கை பராமரிக்கிறதுலயும் காட்டலாமே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
