தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவங்க அமுதமா விற்கிறாங்க!'

 'இவங்க அமுதமா விற்கிறாங்க!'

 'இவங்க அமுதமா விற்கிறாங்க!'


PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்ட, 'டாஸ்மாக்' தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பேசிய நிர்வாகி ஒருவர், 'தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசின் புதிய சட்டங்கள் உள்ளன. அதை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது. குடுவைக்குள் விஷத்தை ஊற்றி, மேலே தேன் என்று எழுதி விற்பதை போன்று இச்சட்டங்கள் உள்ளன. இவ்விஷயத்தில் மாநில அரசு விழிப்பாக இருக்க வேண்டும்' என்றார்.

இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'மது, நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டிய மது பாட்டில்களை தானே இவங்களும் விற்கிறாங்க. என்னமோ அமுதத்தை விற்கிற மாதிரி பேசுறாங்களே...' என முணுமுணுக்க, அவரது அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us